தேர்தல் தொடர்பான தகராறு.. இளைஞன் கொலை..! படகுகளுக்கு தீவைப்பு

0 2301
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகராறில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டதையடுத்து 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கொலை தொடர்பாக 5 பேர், வன்முறை தொடர்பாக 12 பேர் என 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணன். இவருக்கும், தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள மதியழகன் தரப்பினருக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரு கும்பல் மதிவாணனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இதையடுதது கொலை செய்யப்பட்ட மதிவாணனின் ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் எதிர் தரப்பினரின் வீடுகளில் இருந்த வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது மட்டுமின்றி ஒரு சில வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்த நிலையில் 6 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 50க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தியதில் மதிவாணன் கொலை தொடர்பாக 5 பேர், கலவரம் தொடர்பாக 12 பேர் என 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments