தமிழ்நாட்டில் இன்று 5879 பேருக்கு கொரோனா உறுதி... சென்னையில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

0 4706
தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில், புதிதாக 5 ஆயிரத்து 879 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள் ளது. இவர்களில், 57 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.

இதுவரை,கொரோ னாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 51ஆயிரத்தை தாண்டி உள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து, ஒரே நாளில் அதிகபட்சமாக 7  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் 26 வயது இளைஞர்  உள்பட 99 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் புதிதாக ஆயிரத்து 74 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண் டியுள்ளது.

காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 368 பேரும் , செங்கல்பட்டில் 314 நபர்களும், திருவள்ளூரில் 305 பேரும்,  புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments