பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூ.4,189 கோடி

0 1054
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 81 சதவீத உயர்வுடன் 4189 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 81 சதவீத உயர்வுடன் 4189 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருக்கிறது.

வட்டி மீதான வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் உயர்ந்து,  26 ஆயிரத்து 641 கோடி ரூபாயாக இருப்பதாக அந்த வங்கி பங்குச்சந்தை வாரியத்துக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாராக் கடன் உள்ளிட்டவற்றை சமாளிக்க முன்னேற்பாடாக ஒதுக்கப்படும் தொகை 36 சதவீதம் அதிகரித்து 12 ஆயிரத்து 501 கோடி ரூபாயாக உள்ளது. நிபுணர்களின் எதிர்பார்ப்பை விட நிகர லாபம் உயர்ந்ததால், பங்குச்சந்தையில் எஸ்பிஐ பங்கு விலை இரண்டரை சதவீதம் உயர்ந்து 191 ரூபாயாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments