அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்த விரும்பவில்லை - அதிபர் டிரம்ப்

0 1986
அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்த விரும்பவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 3இல் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா காரணமாக அது நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்த விரும்பவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 3இல்  தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா காரணமாக அது நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

நேற்று  ட்விட்டரில் பதிவிட்ட டிரம்ப், மின்னஞ்சல் வாக்கு செலுத்துதலில் முறைகேடுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்து,  ஒத்திவைப்பது குறித்த ஆலோசனையை முன்வைத்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனே பின்வாங்கினார். 

 செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னஞ்சல் வாக்குகளை எண்ணி முடிக்க பல வாரங்கள், மாதங்கள் பிடிக்கும் என்பதால், அதுவரை காத்திருக்க தாம் விரும்பவில்லை என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments