பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது... 96.04 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

0 2278
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது

பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவிகள் 3.11 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வை, பள்ளி மாணாக்கர்களாக 8,15,442 பேர் எழுதினர். மாணவிகள் 4,35,881 பேரும், மாணவர்கள் 3,79,561 பேரும் தேர்வு எழுதினர். மொத்தம் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினரும், மாணவர்களில் 94.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட, மாணவிகள் 3.11 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 7,249 மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், 2,716 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இயற்பியலில் 96.68 சதவீதம், வேதியியலில் 99.95 சதவீதம், உயிரியலில் 97.64 சதவீதம், கணிதத்தில் 98.56 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தாவரவியலில் 93.78 சதவீதம், விலங்கியலில் 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கணினி அறிவியலில் 99.25 சதவீதம், வணிகவியலில் 96.44 சதவீதம், கணக்குப் பதிவியியலில் 98.16 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பார்க்கும்போது, பிளஸ் 1 தேர்வில் 98.10 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.90 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 97.51 விழுக்காடு தேர்ச்சியுடன் கரூர் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. குறைந்தபட்சமாக விழுப்புரம் மாவட்டம் பிளஸ் 1 தேர்வில் 88.68 விழுக்காடு தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments