மும்மொழிக் கொள்கை பற்றி ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்

0 1459
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை பற்றிய முழு அறிக்கை கிடைத்த பின் அது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை பற்றிய முழு அறிக்கை கிடைத்த பின் அது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நிலப் பட்டா நகல்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

வரப்பாளையம் ஊராட்சியில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் அமைப்படும் நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அட்டவணையை அரசு வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி சேனல்களில் பாடங்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் குறித்து முழுவடிவில் தெரிவிக்கப்பட்ட பின் அது குறித்து முதலமைச்சர் உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments