ஆகஸ்ட் ஊரடங்கு.. சென்னைக்கு புதிய தளர்வுகள்..!

0 28437
சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து வித பொருட்களையும் விநியோகிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னைக்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் புதிய தளர்வுகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணிமுதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகளும், கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிகநிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments