ஐபிஎல் இறுதிப்போட்டியை நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதிக்கு மாற்ற உள்ளதாகத் தகவல்

0 1575
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நவம்பர் எட்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடத்த ஐபிஎல் நிர்வாகக் குழு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியை நவம்பர் எட்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதிக்கு மாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அடுத்த 3 நாட்களில் நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முந்தைய கால அட்டவணைப்படி ஐபிஎல் விளையாட்டுக்குப் பின் இந்திய அணியினர் இந்தியா திரும்புவதாக இருந்தது. இறுதிப்போட்டி 2 நாட்கள் தள்ளி வைக்கப்படுவதால், இந்திய அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments