வனத்துறையினரின் விசாரணைக்கு சென்று உயிரிழந்த விவசாயியின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தகவல்

0 1060
தென்காசி மாவட்டத்தில் வனத்துறையினரின் விசாரணைக்கு சென்று உயிரிழந்த விவசாயியின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வனத்துறையினரின் விசாரணைக்கு சென்று உயிரிழந்த விவசாயியின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விவசாயியின் மனைவி பாலம்மாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாயி அணைக்கரை முத்துவின் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் கூடிய நிலை அறிக்கை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாக நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, விவசாயியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் நோக்கில் விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு பதிலளித்தது.

தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களில் காயம் இருந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளதாக கூறி, மறு பிரேத பரிசோதனை தொடர்பான உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments