பட்டும் திருந்தாத பிரேசில் அதிபர் ... பொது வெளியில் மாஸ்க்கை கழற்றி புகைப்படத்துக்கு போஸ்!

0 1117

உலகத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அந்த நாட்டில் 24, 46, 397 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 87,737 பேர் பலியாகியிருக்கின்றனர். பிரேசில் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் Jair Bolsonaro சரியான நவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அவ்வளவு ஏன்... பிரேசில் அதிபர் Jair Bolsonaro கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால், தலைநகர் பிரேசிலியாவிலுள்ள தன் வீட்டிலேயே அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் , கடந்த சனிக்கிழமை மீண்டும் பரிசோதித்து பார்த்ததில் பொல்ஸோனோராவுக்கு நெகடிவ் என்று ரிசல்ட் வந்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு பிரேசிலியாவிலுள்ள தன்  பங்களாவிலிருந்து வெளியே வந்த பொல்ஸானரோ தன் ஆதரவவாளர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். அப்போது, புகைப்படம் எடுப்பதற்காக தன் முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கையும் அவர் கழற்றியது ‘அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன் ஆதரவாளர்களிடத்தில் பேசிய பொல்ஸானரோ, ''எனக்கு முகத்தில் மாஸ்க் அணிய விருப்பம் இல்லை. அனாலும், நான் மாஸ்க் அணியாவிட்டால் அடுத்த நாள் செய்திதாள்களில் முதல் பக்க செய்தியாகி விடும் . கொரோனாவால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை ''என்றார். 

முன்னதாக, ஜூலை மாத முதல் வாரத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்று பிரஸ்மீட் வைத்து பொல்ஸானரோ அறிவித்தார். அப்போது , செய்தியாளர்களிடத்தில் இதே போன்று மாஸ்க்கை கழற்றி விட்டு பேசியதால், பிரேசில் பத்திரிகையாளர் சங்கம் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments