பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் வேலை செய்கிறது - ஏ.ஆர். ரஹ்மான்

0 3659
பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுவதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குற்றம்சாட்டியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஸ்வான் சோனா தில் பச்சேரா என்ற பாடலுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார்.

பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுவதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குற்றம்சாட்டியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஸ்வான் சோனா தில் பச்சேரா என்ற பாடலுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, தான் நல்ல திரைப்படங்களை ஒருபோதும் வேண்டாம் என்று கூறியதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இதனை தடுக்க ஒரு கும்பல் வேலை செய்வதாக கூறினார்.

தயாரிப்பாளர் முகேஷ் சோப்ரா தன்னிடம் பாடல்களை கேட்டதால் இரண்டு நாட்களில் நான்கு பாடல்களை கொடுத்ததாக கூறியுள்ள ரகுமான், தன்னிடம் போகவேண்டாம் என முகேஷ் சோப்ராவை பலர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் விதியை நம்புபவன் என்று கூறியிருக்கும் அவர், எல்லாம் கடவுளிடமிருந்து வருகிறது என முழுமையாக நம்புவதாக தெரிவித்துள்ளார். அழகான திரைப்படத்தை உருவாக்கி தன்னிடம் வந்தால் நிச்சயமாக இசையமைப்பதாகவும் அவர் அப்போது கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments