தங்கம் கடத்தி வந்தது எப்படி? - ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

0 14403
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன்தான் கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக என்ஐஏவிடம் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன்தான் கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக என்ஐஏவிடம் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பெயரில் வந்த பார்சலில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் என்ற முன்னாள் அரசு பெண் அதிகாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் சரக்கு விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக அவர் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments