கொரோனா பரிசோதனையை விரைந்து மேற்கொள்ள புதிய கருவி

0 2053
மேற்கு வங்கத்திலுள்ள கரக்பூர் ஐ.ஐ.டி. புதிய கருவியை உருவாக்கியது

கொரோனா பரிசோதனை முடிவுகளை ஒரு மணி நேரத்தில் விரைந்து வழங்கும் வகையிலான புதிய சோதனைக் கருவியை கரக்பூர் ((IIT Kharagpur)) ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது.

தற்போது அந்த சோதனையானது RT - PCR கருவியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அந்த சோதனை முடிவுகள் வெளியாக 8 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை தேவைப்படுகிறது.

மிக விலை உயர்ந்த, எளிதில் கையாள முடியாத, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் கருவியாக உள்ள RT - PCR சோதனைக் கருவிக்கு மாற்றாக புதிய சோதனைக் கருவியை மேற்குவங்கத்திலுள்ள கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டறிந்துள்ளது. ரூ.400-க்கும் குறைவான விலை உடையதாகவும், அனைவரும் எளிதில் கையாளும் வகையிலும், ஒரு மணி நேரத்தில் முடிவுகளை துல்லியமாக தரும் வகையிலும் புதிய சோதனைக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய கருவியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர தயாராக உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கரக்பூர் ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments