அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை - அத்வானி

0 2346
கட்டடத்தை இடித்ததில் தனக்குத் தொடர்பில்லை என அத்வானி பதில்

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக மூத்த தலைவர் அத்வானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அத்வானியிடம் காணொலியில் விசாரணை நடத்தியது. அவரிடம் ஆயிரத்துக்கு மேற்பட்ட வினாக்களை நீதிபதி வினவினார். அவற்றுக்கு அத்வானி, மசூதியை இடித்ததில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தான் குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் தன் பெயர் சேர்க்கப்பட்டதாகவும், சோடிக்கப்பட்ட சான்றுகளைக் கொண்டு தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அத்வானி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments