நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவு

0 1278
நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

மண்டல இணைப் பதிவாளர்களுக்குக் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

துத்தநாகம், விட்டமின் அடங்கிய சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

யாருக்கேனும் தொற்று உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments