செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 909
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. 

மதுரையில் 290 பேருக்கும், குமரியில் 266 பேருக்கும், நெல்லையில் 176 பேருக்கும், தேனி மாவட்டத்தில் 169 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 140 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 214 பேரும், தேனியில் 65 பேரும், வேலூரில் 43 பேரும், நெல்லையில் 19 பேரும் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

புதுச்சேரியில் புதிதாக 139 பேர் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரியில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதால், பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments