ஒட்டு மொத்த தெலங்கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகளை விட.. தமிழகத்தின் 9 தென்மாவட்டங்களில் அதிக பரிசோதனைகள்..!

0 1428
9 தென் மாவட்டங்களில் மட்டும் தெலங்கானா மாநிலம் முழுவதும் நடைபெற்ற கொரோனா சோதனைகளை விட அதிக எண்ணக்கையில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

9 தென் மாவட்டங்களில் மட்டும் தெலங்கானா மாநிலம் முழுவதும் நடைபெற்ற கொரோனா சோதனைகளை விட அதிக எண்ணக்கையில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தேனி, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இந்த 9 மாவட்டங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 278 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது இந்த மாவட்டங்களின் மக்கள் தொகையில் 2.91 சதவிகிதமாக உள்ளது. ஆனால் தெலங்கானா மாநிலம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 22 ஆயிரத்து 326 சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 21.57 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அது பத்துலட்சம் பேருக்கு 28,507 என்ற விகிதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போன்று தமிழகத்தில் குணமடைவோர் எண்ணிக்கையும் 70.89 சதவிகிதமாக உயர்ந்து காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments