சிரிய வான்பகுதியில் ஈரான் பயணியர் விமானம் இடைமறிப்பா?

0 1147

சிரியாவின் வான் பகுதியில், ஈரானின் பயணியர் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைமறித்ததாக வெளியான தகவல் மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெஹ்ரானில் இருந்து லெபனான் தலைநகரம் பெய்ரூட்டுக்கு சென்ற ஈரானின் மகான் ஏர்லைன்ஸ் விமானத்தை சிரிய வான் எல்லையில் அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள் இரண்டு இடைமறித்து பின்தொடர்ந்ததாகவும், அதனால் பீதி அடைந்த ஈரான் விமானி விமானத்தை திடீரென திசை மாற்றியதால், பயந்து அலறிய பயணிகளுக்கு சிறிதாக காயம் ஏற்பட்டதாகவும் ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பின்னால் இஸ்ரேலின் சதி உள்ளதாகவும் ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.

ஆனால், வழக்கமான ரோந்தின் போது இந்த விமானத்தை கண்டதாகவும், அந்த விமானத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே தனது போர் விமானம் பறந்ததாகவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments