நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

0 4113
நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளுக்குக்கு இடைத் தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன்
ஆகியோர் மறைவைத் தொடர்ந்து, 3 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று தேர்தல் ஆணையம் நேற்று கூறியிருந்தது.

மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தொகுதிகளுக்கான தேர்தலை செப்டம்பவர் வரை ஒத்தவைப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தல்களை நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, அதன் செய்தித் தொடர்பாளர் Sheyphali Sharan தெரிவித்துள்ளார். எந்தெந்த தொகுதிக்கு எப்போது தேர்தல் என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments