கொரோனாவில் இருந்து 80 வயதில் மீண்ட குஜராத் முன்னாள் முதல்வர்... பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அசத்தல்

0 1912

கடந்த 1997- ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் சங்கெர்சிங் வாகேலா. காங்கிரஸ் கட்சியிலிருந்த போது, அவர் குஜராத் முதல்வரானார். 2017 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகி தனி கட்சி உருவாக்கினார்.   கடந்த மாதத்தில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வாகேலா பிறகு, காந்திநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஜூலை 16- ந் தேதி கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டுக்கு திரும்பினார்.

வீடு திரும்பிய வாகேலா முடங்கி விடவில்லை. தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். தினமும் ஜாக்கிங் செல்வதோடு, கடினமான பளு தூக்கும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை சமூகவலைத் தளத்திலும் வெளியிட்டுள்ளார். "Body fit+ Mind fit = Life hit" என்ற தலைப்பில் சங்கெர்சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைராலாகியுள்ளன.

முன்னதாக கொரோனாவிலிருந்து குணமடைந்ததும் தான் குணமாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து சங்கெர்சிங் வாகேலா வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதியாக இருந்தாலும் சங்கெர்சிங் வகேலா உடலை கட்டுக் கோப்புடன் வைத்துக்கொள்ள ஆசைப்படுபவர். இதனால், சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பிடித்த உணவை நன்றாக சாப்பிடுவதும் அதிகமாக பால் குடிப்பதும் தன் உடல் பலத்தின் ரகசியம் என்று சங்கெர்சிங் வாகேலா கூறுவது வழக்கம்.சங்கெர்சிங் வாகேலாவுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments