தெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தை எட்டியது - மாநில சுகாதாரத்துறை

0 1735
தெலுங்கானாவில் கொரோனா சமூகப் பரவலாகும் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா சமூகப் பரவலாகும் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹைதராபாத்-செகந்திராபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்படி மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா சமூகப் பரவலாகியுள்ள மூன்றாவது நிலையில் வேகமாக வைரஸ் தொற்று பல்கிப் பெருகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 438 பேர் இந்த கொடிய நோயால் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments