ஊரடங்கைமீறி போட்டு தாக்கிய ரோட்டரியன்ஸ்..! கொரோனா குத்தாட்டம்

0 8720
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஊரடங்கை மீறி அரங்கம் ஒன்றில் கூடிய ரோட்டரி சங்கத்தினர் விருந்து வைத்து குத்தாட்டம் போட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஊரடங்கை மீறி அரங்கம் ஒன்றில் கூடிய ரோட்டரி சங்கத்தினர் விருந்து வைத்து குத்தாட்டம் போட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

கொரோனா சமூக பரவலை தடுக்க நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த சின்னாளப்பட்டி, அஞ்சுகம் காலனி அரங்கம் ஒன்றில் கூடிய ரோட்டரி சங்கத்தினர் போட்ட ஆட்டத்தால் அந்த இடமே அல்லோலப்பட்டது...

காவல்துறையின அனுமதியின்றி ஒன்று கூடி பதவி ஏற்பு விழாவை நடத்திய ரோட்டரியன்ஸ் விருந்து நிகழ்ச்சிக்கு பின்னர் கொரோனா பற்றிய எந்த கவலையுமின்றி முககவசம் இல்லாமல் போட்டு தாக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த குத்தாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் , இதில் பங்கேற்றதாக கூறப்படும் மாவட்ட திமுக கவுன்சிலரின் கணவர் ராஜாகணேஷ், சின்னாளப்பட்டி திமுக நகர பொருளாளர் முருகன், காந்திகிராம பல்கலைகழக பேராசிரியர் என அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். இந்த பார்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது தொற்று நோய் பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

முக கவசம் இன்றி கும்பலாக சுற்றினால் கொரோனா அனைவரையும் போட்டு தாக்கிவிடும் என்பதை உணர்ந்தாவது பொறுப்புடன் சமூக இடைவெளியை பின் பற்றுவது நாம் அனைவரின் கடமை என்பதை உணர்வோம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments