எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு

0 2828
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையில் வில்லியனூர் ரவுண்டானாவில் எம்ஜிஆர் சிலை அமைந்துள்ளது. பிற்பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத விஷமிகள், இச்சிலைக்கு காவி துண்டை அணிவித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்துச் சென்ற உப்பலம் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிலை முன்பு அமர்ந்து கோசமிட்டனர்.

வில்லியனூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments