உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் முகேஷ் அம்பானி..!

0 9176
உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள நிகழ்நேர பட்டியலில், ஜியோ நிறுவனத்தில் கிடைக்கபெற்ற தொடர்ச்சியான முதலீட்டின் மூலம், அம்பானியின் சொத்தின் மதிப்பு சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம், அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி ஐந்தாம் இடத்தை அடைந்துள்ளார். இதனிடையே, சுமார் 13 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments