"எந்த சவாலையும் சந்திக்க விமானப்படையினர் தயாராக இருக்க வேண்டும்" - ராஜ்நாத்சிங்

0 2333

லடாக் எல்லையில் எத்தகைய சூழலையும் சந்திக்க விமானப்படையினர் தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று தொடங்கிய மூன்று நாள் விமானப்படை கமாண்டர்கள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், கிழக்கு லடாக் எல்லையில் விமானப்படையை முன்னணிக்கு நகர்த்தப்பட்டதன் மூலம் எதிரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாலகோட்டில் நிகழ்த்திய விமானப்படை தாக்குதலைப் பாராட்டிய அவர், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருக்குமாறு வலியுறுத்தினார். கொரோனா பாதிப்பு காலத்தில் விமானப்படை மேற்கொண்ட பணிகளை ராஜ்நாத்சிங் வெகுவாகப் பாராட்டினார்.

மாநாட்டில் பேசிய விமானப் படைத் தளபதி பகதூரியா, எத்தகைய சவாலையும் சந்திக்க இந்திய விமானப் படை தயாராக இருப்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்தார். குறுகிய கால உத்தரவுக்கும் பணியாற்ற வேண்டியது அவசியம் என கமாண்டர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

அண்டைநாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த முன்னெச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என விமானப்படை கமாண்டர்கள் சுட்டிக் காட்டினர். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் நடத்தி துல்லியத் தாக்குதல்களின் தொழில்நுட்ப நேர்த்தியை நாடே பாராட்டியதை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments