அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய ஆன்லைன் இணையதளம் துவக்கம்

0 1692
அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய ஆன்லைன் இணையதளம் துவக்கம்

கொரோனா நிவாரண உதவிகள் கிடைக்காத அமைப்புசாரா தொழிலளர்களுக்கு உதவிட ஆன்லைன் பதிவு தளம் ஒன்றை தமிழக தொழிலாளர் நலத் துறை துவக்கி உள்ளது.

தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் தலா 1000 ரூபாயும், இரண்டுமுறை இலவச ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது.

ஆனால் எந்த நல அமைப்பிலும் பதிவு பெறாத கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 50 சதவிகிதம் வரை உள்ள  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அவர்களும் ஆன்லைனில் பதிவு பெற்று உதவிகளை பெற தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்து, சில தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments