கொரோனாவால் பாதித்த 503 கர்ப்பிணிகள்... 503 குழந்தைகளும் நலம்! சாதித்த அரசு மருத்துவமனை

0 1937

ந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள். மகாராஸ்டிர மாநிலத்தில் 33 சதவிகிதம், டெல்லியிர் 14 சதகிவிதம், தமிழ்நாட்டில் 13 சதவிகிதம், ராஜஸ்தானில் 7 சதவிகிதம், குஜராத்தில் 5 சதவிகிதம், உத்தரபிரதேசத்தில்  4 சதவிகிதம், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 3 சதவிகித கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

நகரங்களில் மும்பை அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மும்பை, சென்ட்ரல் பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 503 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 503 கர்ப்பிணிகளுமே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஒரு தாய் சேய் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.

இதில், 191 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மற்றவர்கள் சுகபிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்தனர். 436 குழந்தைகள் தங்கள் தாயுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  குழந்தைகள் மற்றும் தாய்கள் நலனுடன் இருப்பதாக நாயர் மருத்துவமனயின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் நீரஜ் மகாஜன் தெரிவித்துள்ளார்.

FIGO என்று அழைக்கப்படும் சர்வதேச மகளிர் மருத்துவம்  மற்றும் மகப்பேறு கூட்டமைப்பின் இதழில் நாயர் மருத்துவமனையின் இந்த சாதனை குறிப்பிடப்பட்டுள்ளது. ''இக்கட்டான காலக்கட்டத்தில் நாயர் மருத்துவமனை மருத்துவர்களின் மகத்தான பணி உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறந்த உதாரணம்'' என்று அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments