ஆந்திராவில் செப்டம்பர் 5ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டம்

0 2233
ஆந்திராவில் செப்டம்பர் 5ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டம்

ஆந்திராவில் செப்டம்பர் 5இல் பள்ளிகளை திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் அடிமுலாபு சுரேஷ் (Adimulapu Suresh) செப்டம்பர் 5இல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், எனினும் இறுதி தேதி சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

பள்ளிகள் திறக்கப்படும் வரை மதிய நேர உணவுக்கான பொருள்கள் மாணவர்களின் வீடுகளில் நேரடியாக அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments