20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சிறைப்பிடித்த நபர் கைது

0 981
20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சிறைப்பிடித்த நபர் கைது

ஐரோப்பிய நாடான உக்ரைனில், 20 க்கும் மேற்பட்டோரை பேருந்தில் பணயக் கைதிகளாக பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர். மாக்சிம் க்ரிவோஷ் (Maksym Kryvosh) என்பவன் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன், லுட்ஸ்க் நகரில் பேருந்தை வழிமறித்து பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்தான். தொடர்ந்து, பேருந்துக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதை அடுத்து, அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, சில மூத்த அரசியல்வாதிகள் தங்களை தீவிரவாதிகள் என அறிவித்துகொள்ள வேண்டும் அந்த நபர் வலியுறுத்தியுள்ளான். போலீசார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் மூலம் முதலில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்து சிறிது நேரத்தில் கடத்தல்காரரின் கவனத்தை திசை திருப்பி பேருந்துக்குள் நுழைந்த போலீசார், அவனை கைது செய்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments