“இன்னும் 3 மாதங்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவுக்கு முற்று கிடைக்கும்” - மாநகராட்சி ஆணையர்

0 62255
சென்னை மாநகரில் பொதுமக்கள் இன்னும் 3 மாதங்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா போராட்டத்தில் ஒரு முற்று கிடைக்கும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரில் பொதுமக்கள் இன்னும் 3 மாதங்களுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா போராட்டத்தில் ஒரு முற்று கிடைக்கும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பை கண்காணிக்கும் மேலாண்மைக் குழுக்கள், கண்காணிப்புக்குழுக்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். கூட்டத்தில் பேசிய ஆணையர், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத அங்காடிகளை, வணிகள் வளாகங்களை மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த நகரம் சென்னைதான் என்றும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

இதுவரை 4 லட்சத்து 92 ஆயிரத்து 149 பேர் சென்னைக்கு வருவதற்கு இ.பாஸ் விண்ணப்பித்தனர் என்றும் அவற்றை ஆய்வு செய்து  ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 764  இ.பாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments