பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு, முதலமைச்சர் வாழ்த்து

0 3264

பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும், மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பணிசிறக்க தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments