வருமான வரி ஆய்வு நோட்டீஸ் வந்தால் நேரில் செல்ல வேண்டாம் , இணையத்தளத்திலேயே பதிலளிக்கலாம் - வருமான வரித்துறை

0 1261
வருமான வரி ஆய்வுக்கு நோட்டீஸ் வந்தால், நேரில் சென்று அதிகாரியைச் சந்திக்க வேண்டியதில்லை என்றும், இணையத்தளம் வழியாகவே அதற்குப் பதிலளிக்கலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி ஆய்வுக்கு நோட்டீஸ் வந்தால், நேரில் சென்று அதிகாரியைச் சந்திக்க வேண்டியதில்லை என்றும், இணையத்தளம் வழியாகவே அதற்குப் பதிலளிக்கலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில் மின்னணு முறையில் வருமான வரி மதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியதில்லை.

இணையத்தளத்தின் வழியாகவே வருமானம், விலக்கு, கழிவு ஆகியவற்றைத் தெரிவித்தால் மற்றொரு பகுதியில் உள்ள முகம் தெரியாத அதிகாரி அதைப் பரிசீலித்து வரியைக் கணக்கிடுவார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் 58 ஆயிரத்து 319 பேர் இணையத்தளம் வழியாக மதிப்பீட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் ஏழாயிரத்து 116 பேரின் அறிக்கைக்கு வரி மதிப்பீடு செய்து தீர்வு காணப்பட்டுள்ளது.

முகமற்ற வரி மதிப்பீட்டின் மூலம் வருமான வரித்துறையின் முகம் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments