அச்சம் தரும் கொரோனா..! கிடுகிடு உயர்வு

0 2762

அச்சம் தரும் வகையில் இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டி உள்ள கொரோனா பாதிப்பு, 11 லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. அதேநேரம், இதுவரை 6 லட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

மஹாராஷ்டிராவில், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 518 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியது. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் மட்டும் 36 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.

டெல்லியில், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்தது.

கர்நாடகாவில், புதிதாக 4 ஆயிரத்து 120 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆன நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியது.

ஆந்திராவில், இதுவரை இல்லாத வகையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.

உத்தரபிரதேசத்தில் 49 ஆயிரம் பேரும், குஜராத்தில் 48 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தெலங்கானா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம்,உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

கேரளாவில் ஒரே நாளில் 821 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.

நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments