நீட், ஜே.இ.இ., யுஜிசி நெட் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை கடைசி நாள்

0 1155
நீட், ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

நீட், ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, ஜூலையில் நடைபெறவிருந்த நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வு மற்றும் யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான காலஅவகாசம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

தேர்வர்கள் https://nta.ac.in/என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதுடன், தங்களது தேவைக்கு ஏற்ப தேர்வு மையத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதுவே இறுதிவாய்ப்பு என்பதால் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. மேலும் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதில் சந்தேகங்கள் இருப்பின், தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments