மின் கட்டணம் விவரம் அறிய ஆன்லைனில் ஏற்பாடு..!

0 4774
வீட்டு மின்கட்டண விவரத்தை அறிய தமிழ்நாடு மின்சார வாரியம் வசதி

வீட்டு மின் பயனீட்டாளர்களின் கட்டண விபரங்களை தெரிந்து கொள்ள மின் கட்டண விபர இணைய தளம், மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் வசதி செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்கணக்கீடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முந்தைய மாத மின் கட்டண தொகையையே கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள், பின்னர் அடுத்த கணக்கீட்டில் மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள, www.tangedco.gov.in இணையதளத்துக்கு சென்று மொத்த தொகை என்று குறிப்பிட்டுள்ளதை கிளிக் செய்து முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments