ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ?

0 5071

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை நடத்தும் ஏற்பாடுகளை அணியின் உரிமையாளர்கள் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஒத்தி வைக்கப்பட்ட அப்போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. ஐபிஎல் தேதியில் டி20 உலகக் கோப்பை அறிவிக்கப்பட்டால், பிற நாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கம் எழும் என்பதால், இதுகுறித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் காத்திருக்கிறது..

இருப்பினும் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டதாகவும், வீரர்கள் பயணிக்க தேவையான பயணிகள் விமானங்கள், அபுதாபியில் வீரர்கள் தங்குவதற்கான ஹோட்டல்கள் தேர்வில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments