இ-சஞ்சீவனி திட்டம் மூலம் தமிழகத்தில் 6471 பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

0 1343
கட்டணமில்லாக் காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டமான இ-சஞ்சீவனிஓபிடி மூலம் ஆறாயிரத்து 471 பேர் பயனடைந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கட்டணமில்லாக் காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டமான இ-சஞ்சீவனிஓபிடி மூலம் ஆறாயிரத்து 471 பேர் பயனடைந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் இணையத்தளம் வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவனி ஓபிடி திட்டம் மே 13ஆம் நாள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

https://esanjeevaniopd.in/  என்ற இணையத்தளம் வாயிலாகவோ, esanjeevaniopd என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவோ தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து இந்தச் சேவையைப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் இத்திட்டத்தில் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலோசனை பெறலாம். தமிழ்நாடு அரசு உரிய பயிற்சிக்குப் பின்னர் 617 அரசு மருத்துவர்களை ஈடுபடுத்தி இந்தச் சேவையை வழங்குவதாகவும், இதுவரை ஆறாயிரத்து 471 பேர் பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை ஈடுபடுத்தியதிலும், அதிகப் பயனாளிகளுக்குச் சேவையை வழங்கியதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments