அறந்தாங்கி சிறுமி கொலை வழக்கு - தப்பியோடிய கைதியை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு

0 1191

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய கைதியை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

7 வயது சிறுமி கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பூக்கடை ராஜா என்பவன் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில், இன்று காலையில் சிறையில் இருந்து ஆண்மை பரிசோதனைக்காக போலீசார் அவனை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் பரிசோதனையில் இருந்த போதே, ராஜா போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து கைதி ராஜாவை பிடிக்க மாவட்ட எஸ்.பி. தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதி அதன் அருகே உள்ள புதுராசாப்பட்டி, தென்னந்திறையன்பட்டி ஆகிய கிராமங்களில் போலீசாருடன் இணைந்து ஊர் பொதுமக்களும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments