லடாக் எல்லையில் இந்தியா பீரங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது

0 24925
ஃபிங்கர் 4 -ல் இருந்து படைகளை வாபஸ் பெறப் போவதில்லை என்கிறது சீனா

லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரிப் பகுதியின் ஃபிங்கர் 4 -ல் இருந்து படைகளை வாபஸ் பெறப் போவதில்லை என சீனா கூறிவருவதை அடுத்து அங்கு கூடுதல் டாங்குகளை இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன தரப்பில் இருந்து அசம்பாவித நடவடிக்கைகள் எதுவும் வராமல் தடுக்கும் நோக்கில் இந்தியா முன்னெச்சரிக்கையாக டாங்குகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 14 மணி நேரம் நீண்ட இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் அளவிலான 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போதும், ஃபிங்கர் 4 பகுதியில் இருந்து துருப்புக்களை வாபஸ் பெற முடியாது என சீனா தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, லடாக் எல்லை நிலவரம் குறித்து பிரதமர் மோடி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்காக வடக்கு கமாண்ட் படை தளபதி ஒய்,கே.ஜோஷி டெல்லி வந்துள்ளார். இந்த நிலையில் எல்லை நிலவரம் குறித்து ஆராய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை மற்றும் மறுநாள் லடாக்கிற்கும் ஜம்மு காஷ்மீருக்கும் செல்ல உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments