நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாமா? எம்பிக்கள் கேள்வி?

0 910

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாமா என்று தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் முதன்முறையாக அக்குழுவின் கூட்டம் அதன் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர் தலைமையில் நடைபெற்றது.

சுமார் இரண்டேகால் மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில்  கொரோனா விவகாரத்தில் அரசு எடுத்த முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குழுவில் 29 பேர் உள்ள நிலையில் 8 பேர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்தத் தகவலை ட்விட்டர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ள சசிதரூர்,  கூட்டத்தில் ஆரோக்ய சேது செயலி குறித்தும், 59 சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

எம்பிக்கள் சிலர், ஆன்லைன் மூலம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்குமா என கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments