கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை - முதலமைச்சர் திட்டவட்டம்

0 3303
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைவான அளவில் தான் கொரோனா தாக்கம் உள்ளது என்றார். கொரோனா தடுப்பு பணிக்காக 10,000 கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலவழித்து உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் முழு ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்திய முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் தவறு என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்திற்கான நில எடுப்பு பணிக்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments