இந்திய வீரர்கள் மீது சீனா முரட்டுத்தனமான தாக்குதலை நடத்தியது-அமெரிக்கா

0 3733

லடாக் எல்லையில் இந்திய படைகளின் மீதான சீனாவின் நடவடிக்கை மிகவும் முரட்டுத் தனமானது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் தெரிவித்துள்ளார்.

Fox News Radioவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்ட அவர், தென்சீன கடலில் சீனாவின் நடவடிக்கைகளும், ஹாங்காங்கை அது கையாளும் விதமும், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி சிந்திக்கிறது என்பதை வெளிக்காட்டுவதாக கண்டனம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையான பிரச்சனையில், சீனா தனது கோர முகத்தை காட்டி விட்டதாக குறிப்பிட்ட அவர், சீன படைகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்தியாவின் 20வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக கூறினார். ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடு என்றும் அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் மிகச்சிறந்த உறவை பேணுவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments