எகிப்தில் எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து-12க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

0 882

எகிப்தில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12கார்கள் தீயில் எரிந்து நாசமாயின.

கெய்ரோ நகரின் முக்கிய சாலையில் அமைந்துள்ள Shuqair-Mostorod எண்ணெய் குழாயில் இந்த விபத்து நிகழ்ந்தது.

கொளுந்து விட்டெரியும் நெருப்பால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 17பேர் காயம் அடைந்துள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments