சீன எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின்கீழ் சுரங்கப்பாதை அமைக்கிறது இந்தியா

0 7593

சீனாவுடன் பதற்றம் நிலவும் நிலையில் அந்நாட்டு எல்லை அருகே பிரம்மபுத்திரா நதியின்கீழ் சுமார் 14 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் (principle approval) அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அசாமின் கோபூர் மற்றும் நுமாலிகார் நகரங்களை (Gohpur and Numaligarh) இணைக்கும் வகையில் நான்குவழி சுரங்கம் (four-lane tunnel) அமைக்க மார்ச்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இது சீனாவின் தாய்கு நதியின்கீழ் ((Taihu Lake in Jiangsu province)) 10 புள்ளி 79 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கபாதையை காட்டிலும் நீளமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

சுரங்க பாதை 3 கட்டங்களாக கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், அதில் வென்டிலேட்டர், நடைபாதை, கழிவுநீர் பாதை அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. டிசம்பரில் தொடங்கப்பட உள்ள திட்டத்தை செயல்படுத்த அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டுமான மேம்பாட்டு நிறுவனம் கைகோர்த்து இருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments