"கொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம்" ஆய்வில் பகீர் தகவல்

0 5497

கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97 லட்சம் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று லண்டன் தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக லண்டனில் இயங்கி வரும் சேவ் தி சில்ட்ரன் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா காரணமாக ஊரடங்கு நிலவுவதால், உலகம் முழுவதும் 160 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையால் கல்விக்கு அரசுகள் பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் இந்த ஆபத்து அதிகமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த நெருக்கடியை போக்க உலக நாடுகளும், நன்கொடையாளர்களும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments