இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் : திமுக முன்னாள் நிர்வாகி வியாசர்பாடியில் கைது

0 2037
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நைனார்குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான அந்தப் பெண் கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரை ஆபாசப் படமெடுத்து மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

புருஷோத்தமன் சில தினங்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். மற்றொரு நபரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான தேவேந்திரனை போலீசார் தேடி வந்தனர்.

செல்போன் ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு டிராக் செய்ததில் அவர் சென்னை வியாசர்பாடியில் உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து செய்யூர் காவல்நிலைய ஆய்வாளர் சின்னத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் தேவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments