இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றத்துடன் தொடக்கம்

0 599

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் நானூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது இந்தியாவில் பங்குச்சந்தை வணிகம் கடும் வீழ்ச்சி அடைந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றமடைந்து வருகிறது.

இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 414 புள்ளிகள் உயர்ந்து 37 ஆயிரத்து ஒன்பது ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 116 புள்ளிகள் உயர்ந்து பத்தாயிரத்து 884 ஆக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments