செத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்டுக்குள் வில்லங்கம்.! தவித்து நிற்கும் குடும்பம்

0 28773
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டிக்டாக்கிற்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு, வில்லுப்பாட்டு பாடும் பெண்ணோடு சென்று விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செத்தும் கெடுத்த கதையாக, அரசால் அழித்தொழிக்கப்பட்ட நாசகர செயலியான டிக்டாக்கால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டிக்டாக்கிற்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு, வில்லுப்பாட்டு பாடும் பெண்ணோடு சென்று விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செத்தும் கெடுத்த கதையாக, அரசால் அழித்தொழிக்கப்பட்ட நாசகர செயலியான டிக்டாக்கால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ஒருகாலத்தில் வில்லுப்பாட்டால் ஊருக்கே கதை சொன்ன இந்த அம்மணி டிக்டாக்கில் போட்ட குத்தாட்டத்தை பார்த்து காதலில் விழுந்த சுந்தரபுருசன் சுப்புராஜ் இவர் தான்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட ஜாய்ஸி என்ற உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்ட சுப்புராஜ், நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள மனைவிக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த சுப்புராஜுக்கு ஒரு மகளும் மகனும் உள்ள நிலையில் டிக்டாக் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

தனது மகளை பள்ளிக்கு விடச்செல்லும் போது, தனது மகளின் தோழியின் தாயான வில்லுப்பாட்டு பாடும் பிரேமா என்ற பெண்ணுடன் சுப்புராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் டிக்டாக் குறித்து பேச அந்த பெண் தானும் டிக்டாக்கில் இருப்பதாக கூறி சில வீடியோக்களை அனுப்பி வைக்க, அந்த பெண்ணின் ஆட்டத்தில் சொக்கிப்போன சுப்புராஜ் சொந்த குடும்பத்தை மறந்தார்

கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த பிரேமாவுக்கு, சுப்புராஜ் ஆதரவு கரம் நீட்ட இருவரும் அவரவர் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு குடும்பத்திற்கு தெரியாமல் ஊர் சுற்றியுள்ளனர். இருவருக்கும் தனி தனியாக டிக்டாக் ஐடி இருக்கும் நிலையில், ஒரே டிக்டாக் ஐடியில் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைபடங்களை வீடியோக்களாக்கி பதிவிட்டதால் வில்லுப்பாட்டு வில்லங்கப்பாட்டானது.

தமிழ் படிக்க தெரியாத மனைவி ஜாய்ஸிக்கு பிறந்த நாள் பரிசு வாங்கி தருவதாக நயவஞ்சகமாக பேசி அழைத்துச்சென்ற சுப்புராஜ், ஜாய்ஸி பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு டிக்டாக்கில் ஆட்டம் போட்ட வில்லுப்பாட்டு வில்லங்கத்தை நிரந்தரமாக தேடிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

விழி பிதுங்கி போன ஜாய்ஸி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து விசாரித்த பின்னர் தான், ஜாய்ஸி பெயரில் உள்ள வீட்டையும், சுப்புராஜ் ஏமாற்றி எழுதி வாங்கிச்சென்றது தெரியவந்தது.

டிக்டாக் காதலியுடன், கன்னியாகுமரி மாவட்டம் வல்லம் பகுதியில் சுப்புராஜ் குடித்தனம் நடத்திவருவது தெரிந்து அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்திலும், பின்னர் வீரவநல்லூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் ஜாய்ஸி..! ஊரடங்கை காரணம் காட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையே வில்லுப்பாட்டு பெண்ணுடன் வசிக்க தடையாக இருக்கும் தனது மனைவியின் புகைபடத்தை முகநூலில் விலைமகள் என்று பதிவிட்டு அவரது செல்போன் எண்ணையும் சுப்புராஜ் பரப்பிவிட்டதாக கூறப்படுகின்றது.

இது குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்தும் புகார் அளித்துள்ளார் ஜாய்ஸி, அவர் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பிக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்த உதவி அய்வாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கங்கை கொண்டானுக்கு மாற்றலாகி சென்று விட்டதால் நீதித்துறையில் சென்று தீர்வு காண ஒப்புக் கொண்டதாக குறுந்தகவல் அனுப்பி வழக்கை கிடப்பில் போட்டுவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றார் ஜாய்ஸி.

இது போன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிந்துள்ள சீனாவின் நாசகார செயலியான டிக்டாக்கை மத்திய அரசு ஒற்றை உத்தரவில் அழித்தொழித்துள்ள நிலையில் செத்தும் கெடுத்த கதையாக இன்னமும் டிக்டாக்கால் சீரழிந்த குடும்பங்கள் உரிய தீர்வு கிடைக்காமல் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments