கொரோனாவிலிருந்து குணமாகி குழந்தையை பிரசவித்த 1,000க்கும் அதிகமான கர்ப்பிணிகள்

0 1687

சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மகப்பேறுக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை திகழ்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் 1300க்கும் மேற்பட்ட நிறைமாத கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மகப்பேறு பிரிவு, எழும்பூர் தாய்- சேய் நல மருத்துவமனை, கஸ்தூரி பாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கர்ப்ப காலத்துக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புடன் சேர்த்து, கொரோனாவை குணப்படுத்துவதற்கான சிகிச்சையும் கூடுதலாக அளித்ததில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி,  குழந்தைகளை  பிரசவித்து வீடு திரும்பியுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments