மும்மடங்கு முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு

0 12916

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நகரில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாற வாய்ப்பிருப்பதால் கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று மாநிலத்தில் 416 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்தை நெருங்கியது.குணமடைந்தவர்கள் போக தற்போது சுமார் 3 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகினறனர்.

இந்நிலையில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த திருவனந்தபுரத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒருவாரத்துக்கு மும்மடங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த முழு ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் அனுமதியில்லை. வீதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கமாண்டோ படைகள் நிறுத்தப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments